கொரோனாவுக்கு எதிராகவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் பாலிடிக்ஸ்

சென்னை: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, வீடுகளில் விளக்கேற்ற பிரதமர் மோடி விடுத்த அழைப்பை, வட இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் அதை புறக்கணித்துள்ளனர்.


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
கொரோனா பிரச்னை என்பது நாட்டு மக்களை மிரட்டி வரும் ஒரு பொது எதிரி. இதற்கு எதிராக போராடுவதற்கு, மக்களை ஒன்று திரட்டுவது தான் மோடியின் நோக்கம். மற்றபடி, இதில் எந்த அரசியலும் இல்லை. இதை வைத்து அவர் ஓட்டு வாங்கப் போவது இல்லை. இதை வைத்து அவர் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் இல்லை.