கொரோனா பாதித்தவர்களை காக்க பிரான்ஸில் மருந்து

பாரீஸ்: ஆரம்ப கட்ட கொரோனா தாக்கத்தைக் கட்டிப்படுத்த ஹைட்ரோ குளோரோகுவீன் சிகிச்சை பலன் தருமென பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம். கடந்த சனியன்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிலையம் இரு மலேரியாவுக்கு எதிரான மருந்துகளைக் கண்டுபிடித்தது. ஹைட்ரோ குளோரோ குவின் மற்றும் குளோரோ குவீன் ஆகிய இந்த இரு மருந்துகளும் கொரோனாவை சரி செய்ய உதவும். இந்த இரு மருந்துகளையும் 'கேம் சேஞ்சர்கள்' என அமெரிக்க அதிபர் அழைத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஓர் பிரஞ்சு இதழில் ஹட்ரோ குளோரோ குவீன் கொரோனா வைரஸை போக்க உதவாது என கூறப்பட்டது. ஹைட்ரோ குளோரோ குவின் மற்றும் அசித்ரோமைசின் ஆகிய மருந்துகளின் கலவை மிதமான கொரோனா பாதிப்புடைய நபர்களுக்கு மருந்தாக அமையுமென சீனா மற்றும் பிரான்சின் உள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் சில மருத்துவர்களின் கூற்றுப்படி ஹைட்ரோ குளோரோ குவின் மருந்து கலவை கொரோனா வைரஸ் தாக்கத்தை நோயாளியின் உடலில் இருந்து முற்றிலும் அழிக்காமல் குணமாவது போல காட்டும். இதனால் கொரோனா வைரஸ் உடலில் இருந்து நீங்கி விட்டது என நம்பி பலர் வீடு திரும்புவர். இது மேலும் அங்குள்ளவர்களுக்கு கொரோனாவை பரப்பும். இது ஆபத்தானது என்றுள்ளனர்.