புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்க மார்ச் 20ம் தேதி டிவி வழியாக பிரதமர் மோடி பேசினார்.
கொரோனாவை தடுக்க 22ம் தேதி மக்கள் ஊரடங்கை அறிவித்த மோடி, தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தாரையும் பற்றி கவலைப்படாமல் கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற பணியாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அதற்காக 22ம் தேதியன்று மாலை 5 மணியளவில் மக்கள் அனைவரும் வீட்டு வாசலில் நின்று 5 நிமிடம் கைகளை தட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மோடியின் இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 22ம் தேதி மாலை நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கைகளை தட்டி தங்கள் நன்றியை தெரிவித்தனர்.